அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம்

சிலாங்கூர்,அக்டோபர் 14-

ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம் எனும் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு, வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 2 முதல் மாலை 7 மணி வரை பத்து கேவ்ஸ், டெவான் மஸ்யராகத் தமன் கேவ்ஸ் கேவ்ஸ் என்ற முகவரியில் உள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் தலைவர் மருதையா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் வசதி குறைந்தவர்களுக்கு தீபாவளி அன்பளிப்பு பொருட்கள் வழங்கப்படவிருக்கின்றன. இந்நிகழ்வில் பிரமுகர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

கடந்த சில ஆண்டு காலமாக வசதி குறைந்த மக்களுக்கு உதவுவதிலும், மாணவர்களுக்கு சமய நன்னெறி பண்புகளை ஊக்குவிக்கும் பட்டறைகளை நடத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் இந்த தீபாவளி அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்வில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Screen

தொடர்புக்கு: வேலன் 018 2870709 / கணேஷ் ராவ் 018 2328607 / தான் குமார் 012 3336870

WATCH OUR LATEST NEWS