புத்ராஜெயா,அக்டோபர் 14-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெற்று நாடாளுமன்றத்தில் தேசிய சட்டமன்ற உறுப்பினரும் செனட்டருமான மனோலன் முகமட் தலைமையிலான பூர்வ குடியினர் சமூகத்தின் பிரதிநிதிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பேராக் பூர்வ குடியினர் சங்கம், மலேசியன் பூர்வ குடியினர் வளர்ச்சி சங்கம், பகாங் செமலே அசோசியேஷன், பகாங் பூர்வ குடியினர் நெட்வொர்க், சிலாங்கூர் பூர்வ குடியினர் கூட்டுறவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்த மரியாதை நிமித்தமாக வருகை தந்ததாக அன்வார் தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த சந்திப்புக் கூட்டத்தின் போது, குறிப்பாக பூர்வ குடியினர் சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் கல்வித் துறையில் சமூக ஈடுபாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மற்றும் பூர்வ குடியினர் குழந்தைகள் அரசாங்கத் துறைகளில் பதவிகளை வகிக்கும் வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் கூறினார்.