பிரீதம் சிங் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

சிங்கப்பூர் ,அக்டோபர் 14-

சிங்கப்பூரின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் , இன்று சிங்கப்பூர் அரசு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆளாகினார். தம் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளை பிரீதம் சிங் மறுத்து விசாரணைக் கோரினார்..

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளரான பிரீதம் சிங் , கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் அமைக்கப்பட்ட நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் பொய்யுரைத்ததாகக் கூறப்படும் இரண்டு குற்றச்சாட்டுகளை மாவட்ட நீதிபதி Liyuk Tan முன்னிலையில் மறுத்தார்.

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் பொய்யுரைத்த சர்ச்சையின் தொடர்பில் அந்த சிறப்புரிமைக் குழு அமைக்கப்பட்டிருந்தது.
பிரீதம் சிங் எதிராக முதல் குற்றச்சாட்டு, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 10 தேதி நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் அவர் பொய்யுரைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS