கதறி அழுதபடி வெளியேறிய மெஸ்ஸி.. சோகத்தில் ரசிகர்கள்.. கோப்பா அமெரிக்கா பைனலில் என்ன நடந்தது?

அக்டோபர் 15-

ஃப்ளோரிடா : 2024 கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் மோதின. அந்த இறுதிப் போட்டியில் 36 ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி பந்தை அடிக்க முயன்ற போது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து ஆட முயன்றார். சில நிமிடங்கள் கழித்து அவரது காயம் இன்னும் மோசமானது. அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை.

இதை அடுத்து அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காயத்தால் கடும் வலி ஏற்பட்டது. தன்னால் போட்டியில் ஆட முடியவில்லை என்பதை எண்ணி அவர் வீரர்கள் அறையில் இருந்தபடி கதறி அழுதார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அவர் போட்டியின் 64வது நிமிடத்தில் ஆடுகளத்தை விட்டு வெளியேறி இருந்தார். அப்போது இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. அதனால் போட்டியில் அர்ஜென்டினா அணிக்காக தன்னால் கோல் அடிக்க முடியவில்லை என்பதை எண்ணி அவர் அழுது இருக்கக் கூடும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். பின்னர் இந்த போட்டியில் 112 வது நிமிடத்தில் மார்டினேஸ் அர்ஜென்டினா அணிக்காக கோல் அடித்தார். இதை அடுத்து 1 – 0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா, கொலம்பியாவை வீழ்த்தியது. அர்ஜென்டினா தொடர்ந்து மூன்றாவது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதனை படைத்தது. மேலும், இது அர்ஜென்டினா அணியின் 16வது கோபா அமெரிக்கா கோப்பை ஆகும்.

\

WATCH OUR LATEST NEWS