அக்டோபர் 15-
ஆஷிஷ் நெஹ்ரா போல் பந்துகளை வீசும் அவர் விஜய் சி.சி-க்கு சொந்தமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்துக்கான நெட் பந்து வீச்சாளராக தேர்வானார். அதன்பிறகு லீக் போட்டிகளில் ஆடி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தேர்டு டிவிஷனில் விளையாடினார்.
024-25 ஆண்டுக்கான ரஞ்சி டிராபி போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான எலைட் குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் மோதின.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜெய்தேவ் உனட்கட் தலைமையிலான சவுராஷ்டிரா அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டையும் இழந்த அந்த அணி 203 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அர்பித் வசவதா 62 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர், எம் முகமது, சோனு யாதவ் தலா 3 விக்கெட்டையும், பிரதோஷ் ரஞ்சன் பால் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதனையடுத்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 367 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதம் விளாசிய தொடக்க வீரர் என் ஜெகதீசன் 100 ரன்களும், சாய் சுதர்சன் 82 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, 2வது இன்னிங்சில் ஆடிய சவுராஷ்டிரா அணி 94 ரன்னுக்கு சுருண்டது. இதன் மூலம் தமிழ்நாடு இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வீழ்த்தியது.
சவுராஷ்டிரா அணி தரப்பில் அதிகபட்சமாக ஷெல்டன் ஜாக்சன் 38 ரன்கள் எடுத்தார். மிரட்டலான பவுலிங்கை வெளிப்படுத்திய தமிழ்நாடு அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங் 6 விக்கெட்டையும், சோனு யாதவ் 3 விக்கெட்டையும், கேப்டன் சாய் கிஷோர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.