பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 15-
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட LRT ரயில் தண்டவாளப்பாதைகளை சீரமைக்கும் பணி இன்று பிற்பகலில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.. காலையில் பெய்த கனத்த மழையில் கோம்பாக் – கிளானா ஜெயா – LRT ரயில் வழித்தடத்தில் ஸ்ரீ ராம்பாய்- க்கும் வங்சா மஜு- விற்கும் இடையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அவ்விரு ரயில் நிலையங்களுக்கு இடையிலான இருப்புப்பாதை வெள்ளத்தில் மூழ்கி, சேதம் ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இருப்புப்பாதையின் உபகரணங்கள் மாற்றப்படும் பணிகள் நடைபெற்று வருவதாக Rapit Rail Berhad கூறுகிறது.
காலை 10.20 மணியிலிருந்து அந்த வழித்தடத்திற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பழுது பார்க்கும் பணி முற்றுப் பெறும் வரையில் கோம்பாக்கிற்கும், வங்சா மாஜுவிற்கும் இடையே ரயில் சேவை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் என்று அந்த LRT நிறுவனம் தெரிவித்துள்ளது.