கோலாலம்பூர், அக்டோபர் 15-
வெள்ளத்தை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் காத்திருந்த NADMA எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியின் அனைத்து கேந்திரங்களும், இன்று நாடு தழுவிய நிலையில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார்.
இன்று காலையில் பெய்த கனத்த மழையைத் தொடர்ந்து பாதிக்கப்ட்ட பகுதிகளில் மக்களை மீட்பதிலும், அவர்களுக்கு உதவுவதிலும் NADNA கேந்திரங்கள் செயல்படத்தொடங்கியுள்ளதாக அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முற்பகுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழை, சீதோஷ்ண நிலை மாற்றத்தினால் முன்கூட்டியே தொடங்கி விட்டது. இதன் காரணமாக நட்மாவும், அது தொடர்புடைய அரசு ஏஜென்சிகளும் வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவுவதில் அவற்றின் செயலாக்கம் முன்கூட்டியே முடுக்கி விட்டப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் குறிப்பிட்டார்.