கூலிம் , அக்டோபர் 16-
கடந்த ஞாயிற்றுக்கிழமை கெடா, கூலிம், Hi Tech Park-கில் உள்ள Lata சீடிம் நீர்விழ்ச்சியில் நண்பர்களுடன் குளித்துக்கொண்டிருந்த போது, நீரின் வேகத்தில் அடித்துச்செல்லப்பட்ட பினாங்கைச் சேர்ந்த 31 வயதுடைய தினேஸ்வரன் பரமேஸ்பரன் என்பவரின் உடல் நேற்று மாலை 6.38 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூன்று நாட்களாக தினேஸ்வரன் தேடப்பட்டு வந்த நிலையில் அவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது அஜிசுல் முகமது கைரி தெரிவித்தார்.
பினாங்கு, Bayan Lepas தொழிற்பேட்டையில் வேலை செய்து வந்த அந்த இளைஞர், கடந்த ஞாயிற்றுக்கிழமை 16 நண்பர்களுடன் உல்லாசமாக அந்த நீர்வீழ்ச்சியில் குளித்துக்கொண்டு இருந்த போது இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்தது.
சவப்பரிசோதனைக்கான அந்த இந்திய இளைஞரின் உடல் கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முகமது அஜிசுல் குறிப்பிட்டார்.