இஸ்கந்தர் குட்டி வழக்கு சர்ச்சையின் மத்தியில் துன் மகாதீர் IJN- மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

கோலாலம்பூர், அக்டோபர் 16-

தாம், இந்தியா, கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் / தாம் ஓர் உண்மையான மலாய்க்கார முஸ்லிம் அல்லாதவரைப் போன்றும் / ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, மலாய்க்காரர்கள் மத்தியில் தமது செல்வாக்கை இழக்கச் செய்து விட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, கோலாலம்பூர் IJN மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பலரது கவன ஈர்ப்பாக அமைந்துள்ள துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிராக துன் மகாதீர் தொடுத்துள்ள இந்த மானநஷ்ட வழக்கு தற்போது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 99 துன் மகாதீர் திடீரென்று சுகவீனப்பட்டுள்ள நிலையில் அவரின் நுரையீரலில் கிருமித் தொற்று பரவியிருப்பதாக கூறி, கோலாலம்பூர் இருதய சிகிச்சை கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

துன் மகாதீர், தீவிர சிகிச்சைப்பெறும் பொட்டு 12 நாட்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவரின் வழக்கிஞர் மியோர் நோர் டைதிர் சுஹைமி நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து துன் மகாதீர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS