கோத்தா திங்கி , அக்டோபர் 16-
ஜோகூர், கோத்தா திங்கி, செடிலியில் (Sedili) 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போன ஒரு மோட்டார் சைக்கிள், செகாமாட் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த Honda Wave 100 ரக மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் கண்டதாக, செகாமாட் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் அஹ்மத் ஜம்ரி மரின்சா தெரிவித்தார்.
இதையடுத்து 38 வயது இந்தியப் பிரஜையான சந்தேக நபர் கைதானார்.
மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்ட Balai Barang அருகே அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.
சந்தேக நபர் தனி ஆளாக அத்திருட்டில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.