கிள்ளான்,அக்டோபர் 16-
தலைநகரின் மையத்தில் உள்ள கிள்ளான் ஆற்றங்கரையில் சிக்கிய ஆடவரைக் காப்பாற்றும் ஜேசிபி இயந்திர வாகன ஓட்டுநரின் காணொலி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கிள்ளான் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்த நிலையில் அங்கு இருந்த ஆடவரைப் பாசார் செனி எம்ஆர்டி நிலையத்திற்கு அருகில் இருந்த ஜேசிபி இயந்திர வாகன ஓட்டுநர் மீட்க உதவினார்.
ஜேசிபி இயந்திர வாகனத்தின் மண்ணை அள்ளும் கருவியின் துணையோடு ஆடவர் மீட்டுச் சாலையில் விட்டார்.
ஆற்றின் ஓரம் இருந்த ஆடவரை மீட்ட ஜேசிபி இயந்திர வாகன ஓட்டுநரின் செயலுக்குப் பொது மக்கள் சமூக ஊடகங்களில் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.