கோலாலம்பூர், அக்டோபர் 16-
மலேசியாவில் பிறந்த 30,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் குடியுரிமை நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சைபுதீன், அந்த குடியுரிமை தகுதிக்கு மூன்று நிபந்தனைகள் இருப்பதாகக் கூறினார். அதாவது, குழந்தைகளாக தத்தெடுக்கப்பட்ட நபர்கள், 1957 க்கு முன் இங்கு பிறந்தவர்கள் மற்றும் 1963 இல் மலேசியா நிறுவப்படுவதற்கு முன்பு பிறந்தவர்கள் ஆவர்.
மத்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15A மற்றும் பிரிவு 19(1) ஆகியவற்றின் கீழ் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான வழிகாட்டுதல்களையும் உள்துறை அமைச்சகம் இறுதி செய்துள்ளது என்றார்.
மேலும் தான் நாளை நடைபெற உள்ள மக்களைவையில் இது குறித்தான முழுமையான விளக்கங்களைக் கூற உள்ளதாக அவர் மேலும் கூறினார்.