கோலாலம்பூர், அக்டோபர் 16-
கல்விக் கொள்கையின் (DPN) உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கானத் திட்டத்தின் அடிப்படையில் கிராமங்களில் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான இணைய அணுகல் மேம்படுத்தப்படும் என துணைக் கல்வி அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்.
முதற்கட்டமாக 400 வகுப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 364,579 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் 86,062 சிறப்பு விதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேர்ந்தெடுப்பட்டுள்ள ஆசிரியர்களை உள்ளடக்கிய 400 வகுப்புகளில் இம்மேம்பாட்டுத் திட்டம் செய்லபடவிருப்பருப்பதாகவும் 810 ஆசிரியர்களின் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என துணைக் கல்வி அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்