புத்ராஜெயா,அக்டோபர்
பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.
இதனையொட்டி புத்ராஜெயாவில் தமது தலைமையிலான நிதி அமைச்சில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் இறுதிக் கட்டப்பணிகளை பார்வையிடுவதில் பிரதமர், இன்று காலையில் தமது நேரத்தை செலவிட்டார்.
காலை 9.40 மணிக்கு நிதி அமைச்சை வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான், துணை நிதி அமைச்சர் Lim Hui Ying மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பதில் 213 பேர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பொருளாதாரப் பின்னணியை கொண்டவர்கள் ஆவார்.