கிடங்கு பாதுகாவலருக்கு 800 வெள்ளி அபராதம்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-

WhatsApp மூலம் தமது காதலிக்கு அனுப்பி வைத்த Good Morning Sayang குருந்தகவலுக்கு பதில் அளிக்கவில்லை என்பதற்காக அந்த இளம் பெண்ணை கன்னத்தில் அறைந்து, கண்டித்த ஆடவருக்கு ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 800 வெள்ளி அபராதம் விதித்தது.

20 வயது முஹம்மது நூர்ஹக்கிமி ஹாரூன் என்ற அந்த இளைஞர் மாஜிஸ்திரேட் சுஹைலா ஷபியுதீன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தனக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அந்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் 12.15 மணியளவில் பத்து பஹாட், ஜாலான் பரிட் பிலா என்ற இடத்தில் பிராணிகள் வளர்ப்பு கடை ஒன்றில் 20 வயது இளம் பெண்ணை அந்த நபர், கண்மூடித்தனமாக தாக்கியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனது காதலனுக்கு மதிய உணவு பொட்டலத்தை கொடுப்பதற்காக அவரின் வேலை இடத்திற்து வந்த அந்தப் பெண்ணுடன் தகராற்றில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட இளைஞர் தாம் அனுப்பிய Good Morning குறுந்தகவலுக்கு பதில் அனுப்பாத காரணத்தினால் அவரின் கன்னத்திலேயே சரமாரியாக அறைந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS