பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-
குடியுரிமை தொடர்பில் அரசியலமைப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாமைக்கும் அதிகமான எம்.பி.க்களின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒரே குரலாக, ஒருமித்தக் கருத்துடன் இந்த முக்கிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியிருப்பது ஒரு வரலாற்றுப்பூர்வமான நிகழ்வாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் பிறக்கும் மலேசிய குடியுரிமையைக்கொண்டுள்ள பெண்களின் பிள்ளைகள், இயல்பாகவே மலேசிய குடியுரிமைக்கான அந்தஸ்தையும் அனுகூலங்களையும் பெறுவதற்கு இந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா வகை செய்கிறது.
இது மலேசியப் பெண்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் கூறினார் வர்ணித்துள்ளார்.