கோலாலம்பூர், அக்டோபர் 17-
இன்று அக்டோபர் 18 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கும் 2015 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதேவேளையில் மக்களுக்கு நியாயமான நிறைய அனுகூலங்களை வழங்க வல்லதாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடிக்காட்டினார்.
புத்ராஜெயாவில் உள்ள நிதி அமைச்சில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் இறுதிக்கட்ட ஆயத்தப்பணிளை இன்று பார்வையிட்டப் பின்னர் அது குறித்து தமது முகநூலில் பதிவேற்றம் செய்த செய்தியில் நிதி அமைச்சருமான பிரதமர் இதனை தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்திற்கு தலைமையேற்றப்பின்னர் தமது தலைமையில் இரண்டாவது ஆண்டாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட், நாடு மற்றும் மக்களின் நலன் சார்ந்த அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக இருக்கும் என்று கோடிகாட்டினார்.
டத்தோஸ்ரீ அன்வார், இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.