கோலாலம்பூர், அக்டோபர் 18-
நாட்டில் கடந்த ஆண்டு 646 தரவுக் கசிவுகள் நிகழ்ந்துள்ளதாக இலக்கவியல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம்ஆண்டை விட இந்த எண்ணிக்கை மிக அதிகம் என குறிப்பிட்ட கோபிந்த் சிங், 2022 ஆம் ஆண்டு 50 தரவுக்கசிவுச் சம்பவங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளாக கூறினார்.
அதேவேளையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை 427 தரவுக் கசிவுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தமது அமைச்சு அடையாளம் கண்டுள்ளதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.
தரவுக் கசிவுச் சம்பவங்கள் நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் விளக்கினார்.
தரவுக்கசிவு ஏற்படும் போது தனிப்பட்ட நபரின் விவரங்கள் பல்வேறு தரப்பினருக்கு சென்டையும் என்பதுடன் அரசாங்க ரகசியங்களும் பாதுகாப்புத்தொடர்பாக முக்கிய தகவல்களும் பல்வேறு தரப்பினரால் களவாடப்படும். இது நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் மிரட்டலை ஏற்படுத்தும் என்று கோபிந்த் சிங் தெளிவுபடுத்தினார்.