1BestariNet திட்டம் தொடர்பில் முகைதீனிடம் உரிய நேரத்தில் விசாரணை SPRM அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 18

லஞ்ச ஊழல் நடந்திருப்பதாக கூறப்படும் 1BestariNet திட்டம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினிடம் உரிய நேரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நாட்டின் கல்வி அமைச்சராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பொறுப்பில் இருந்த போது 1BestariNet திட்டம் தொடங்கப்பட்டது.

1BestariNet என்ற இத் திட்டம், YTL தகவல் தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து மலேசிய கல்வி அமைச்சு அமல்படுத்திய திட்டமாகும்.

மலேசியாவில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் 4G மற்றும் அதன் தளம் சார்ந்த அதிவேக சக்தியைக்கொண்ட இண்டர்நெட் சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.


1BestariNet தொடர்பாக விசாரணை நடத்த வேண்டிய மேலும் பல விவகாரங்க்ள இருப்பதால் உரிய தருணத்தில் மட்டுமே முகைதீடம் விசாரணை நடத்தப்படும் என்று டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS