காஜாங் ,அக்டோபர் 18-
காஜாங், சௌஜனா இம்பியன்- னில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 வயது இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
.
அந்தப் பெண்ணின் உடல், வீட்டின் மேல் மாடி அறையில் கண்டுபிடிக்கப் பட்டதாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சிலாங்கூர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறினார்.
“இச்சம்பவத்தின் போது,பாதிக்கப்பட்டவரின் தாயும் தந்தையும் வேலைக்கு சென்றுள்ளனர். அவரது இளைய சகோதரர் பள்ளியில் இருந்ததாக தெரிய வந்தது
அந்த இளம் பெண் வீட்டில் தனியாக இருந்ததாக நம்பப்படுகிறது. இதில்அந்தப் பெண் கருகி மாண்ட வேளையில் இத் தீ விபத்தினால் 80 விழுக்காடு சேதம் ஏற்பட்டுள்ளது என அஹ்மத் முக்லிஸ் முக்தார் குறிப்பிட்டார்.