கோலாலம்பூர், அக்டோபர் 18-
இலக்குக்கு உரிய மக்களுக்கு மட்டுமே பெட்ரோல் ரோன் 95 உதவித்தொகை எனும் திட்டத்தை அரசாங்கம் அடுத்த 2025 ஆம் ஆண்டு மத்தியப்பகுதியில் அமல்படுத்தவிருக்கிறது.
டீசல் உதவித் தொகை அகற்றப்பட்டு, இலக்குக்கு உரிய மக்களுக்கு மட்டுமே உதவித்தொகை என்று அரசாங்கம் அமல்படுத்தியுள்ள திட்டத்தைப் போன்று இலக்குக்கு உரிய மக்களுக்கு மட்டுமே பெட்ரோல் ரோன் 95 க்கு உதவித் தொகை வழங்கப்படும்.
எனினும் இந்த திட்டத்தின் வாயிலாக நாட்டு மக்கள் மத்தியில் 85 விழுக்காட்டினருக்கு பெட்ரோல் ரோன் 95 உதவித் தொகை கிட்டுவதற்கான தனது கடப்பாட்டை அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்துள்ளார்.
