கோலாலம்பூர், அக்டோபர் 18-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்திய சமுதாயத்திற்கு 130 மில்லியன் ரிங்கிட் அல்லது 13 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்திய சமுதாயத்தின் மாந்தர் மூலதனம், சமூகவியல், நலனபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் அரசாங்க ஏஜென்சிகள் மூலம் கடன் வசதிகள் மற்றும் வியாபார கடன் உத்தரவாதம் போன்றவற்றுக்காக ஒட்டுமொத்தமாக 13 கோடி வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.
இந்த 13 கோடி வெள்ளி நிதி என்பது இந்திய சமுதாயத்தின் சமூகவியல் உருமாற்றுப் பிரிவான மித்ராவிற்கு 10 கோடி வெள்ளியும், தெக்குன் கடன் உதவிக்கு 3 கோடி வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
