வீட்டில் முதியவர் இறந்து கிடந்தார்

தஞ்சோங் மாலிம்,அக்டோபர் 19-

தனியொரு நபராக வீட்டில் வசித்து வந்ததாக நம்பப்படும் முதியவர், வீட்டிற்குள் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் தஞ்சோங் மாலிம், ஸ்லிம் ரிவேர் அருகில் கம்போங் பாரு -வில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து தீயணைப்பு, மீட்புப்படையினர் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று சோதனையிட்ட போது 75 வயது முதியவர் இறந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக அந்த முதியவர் வீட்டிற்கு வெளியே நடமாடவில்லை என்பது தெரியவந்துள்ளதாக பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்டை உதவி இயக்குநர் சபோரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்த முதிவரின் சடலம், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS