இரண்டு அமலாக்க அதிகாரிகள் கைது

ஜார்ஜ் டவுன், அக்டோபர் 19-

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் சோதனையின்றி நாட்டிற்குள் நுழைவதற்கு குடிநுழைவு முகப்பிடங்களில் செட்டிங் முறையை அமைத்து, அவர்கள் நுழைவதற்கு அனுமதி அளித்ததாக நம்பப்படும் இரண்டு அமலாக்க அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

குடிநுழைவு அமலாக்கப்பிரிவைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், பெண்ணும், நேற்று பினாங்கு SPRM அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு ஏதுவாக அவ்விருவரும் இன்று பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வரும் அக்டோபர் 21 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்படுவதற்கு நீதிமன்ற உத்தரவை SPRM பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பினாங்கில் உள்ள ஒரு ஹோட்டலில் வங்காளதேச ஆடவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த இரண்டு குடிநுழைவு அதிகாரிகள் பிடிபடுவதற்கு வகுத்துள்ளது. இவ்விரு அதிகாரிகளும் அந்நிய நாட்டவர்களை அனுமதிப்பதில் பெரியளவில் லஞ்சம் பெற்று வந்ததாக நம்பப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS