சுங்கை பூலோ,அக்டோபர் 19-
சிலாங்கூர், சுங்கைபூலோ, ஹில்பார்க் சௌஜானா உத்தாமா – வில் உள்ள ஒரு எண்ணெய் நிலையத்தில் தனது காரிலிருந்து பிரம்பை எடுத்து, தனிநபரை தாக்கி ரகளைப் புரிந்ததாக நம்பப்படும் மாதுவை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு 7.50 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் குறித்து அந்த எண்ணெய் நிலைய மேற்பார்வையாளர், போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து 42 வயதுடைய அந்த மாது இன்று அதிகாலை 3.40 மணியளவில் சுங்கைபூலோ, சௌஜானா உத்தமா போலீஸ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் ஹபீஸ் முஹமட் நோர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட எண்ணெய் நிலையத்தில் ஒரு வாகனத்தின் பின்புறம் அந்த மாது தனது வாகனத்தை நிறுத்தியதால், அந்த வாகனமோட்டி வெளியேற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினார்.
தனது வாகனத்தை அகற்றும்படி அந்த மாதுவிற்கு அறிவுறுத்திய போது, ஆவேசம் அடைந்த அவர், பிரம்பினால் மற்றவர்களை தாக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.