ஜார்ஜ் டவுன், அக்டோபர் 19-
பினாங்கில் மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையில் மிக அபாயகரமாக காரை செலுத்திய ஒரு நபரின் அடாவடித்தனத் செயல் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து அந்த நபரை பிடிப்பதில் போலீசார் வெற்றிக்கண்டனர்.
பினாங்கு, அயர் இடம்- மைச் சேர்ந்த 39 வயதுடைய அந்த நபர், கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஜாலான் டத்தோ கெரமாட் சாலையில் வளைத்துப் பிடிக்கப்பட்டார் என்று திமூர் லாட் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் லீ ஸ்வீயே சாகே தெரிவித்தார்.
கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஜாலான் டத்தோ கெராமட் மற்றும் லெபு சூலியா ஆகிய பகுதிகளில் அந்த நபர், மிக ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியுள்ளார் என்பது விசாரயில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார.
குற்றச்செயல்கள் தொடர்பில் ஏற்கனவே 12 குற்றப்பதிவுகளை கொண்டுள்ள அந்த நபர், போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சுப்பரின்டென்டான் லீ ஸ்வீயே சாகே தெரிவித்தார்.