பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 21-
பெற்ற கடனுக்கான வட்டியை முறையாக செலுத்தவில்லை என்று கூறி அவர்களின் வீடுகளில் சிவப்பு சாய வீச்சு நடத்துவது, தீயிடுவது போன்ற நாசக்காரியங்களில் ஈடுபட்டு வந்த வட்டி முதலைகள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் கும்பல் ஒன்றை போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
கடந்த வாரம் வியாழக்கிழமை போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனை நடவடிக்கையில் அந்த கும்பலைச் சேர்ந்த நால்வர் பிடிபட்டுள்ளனர் என்று பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமது தெரிவித்தார்.
23 க்கும் 28 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஆ லாங் கும்பல், பினாங்க, கெடா மற்றும் பேரா ஆகிய மூன்று மாநிலங்களில் பிடிபட்டுள்ளதாக டத்தோ ஹம்சா அகமது குறிப்பிட்டார்.