பினாங்கு , அக்டோபர் 21-
அடுத்த வாரம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு வசதி குறைந்த ஏழை இந்திய மக்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியம், தனது சமூக கடப்பாட்டில் ஒரு பகுதியாக பினாங்கு, ஜாலான் ஸ்காட்லாந்து – டில் உள்ள இராமகிருஷ்ணா ஆசிரமத்தைச் சேர்ந்த 45 சிறார்களுக்கு தீபாவளி புத்தாடைகளை வாங்கி தந்தது.
RSN ராயாரை நாடாளுமன்ற உறுப்பினராக கொண்டுள்ள ஜெலுத்தோங் தொகுதி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் பினாங்கு இந்து அறப்பாணி வாரியத்தின் பொறுப்பாளர்கள், 45 மாணவர்கள், பினாங்கு, புக்கிட் ஜம்புல் -லில் உள்ள கம்தர் பேரங்காடி மையத்திற்கு அழைத்து வந்து, அவர்களின் தேர்வுக்குரிய ஆடைகளை வாங்கி தந்தனர்.

மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் தரவல்ல தீபாவளி திரநாள் கொண்டாட்டத்தில் வசதிகுறைவு அல்லது ஆதரவின்மை காரணமாக யாரும் விடுப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கில் வரலாற்று சிறப்புமிக்க பினாங்கு இராமகிருஷ்னா ஆசிரமத்தியில் உள்ள மாணவர்கள், பேரங்காடிக்கு நேரடியாக அழைத்து வரப்பட்டு, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரப்பட்டதாக அறவாரியத்தின் தலைவர் RSN ராயர் தெரிவித்தார்.

RSN ராயருடன் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் டாக்டர் R. லிங்கேஸ்வரன், பினாங்கு முன்னாள் முதலமைச்சர் லிம் குவான் எங், அறவாரியத்தின் ஆணையர்களாக பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், சங்கர் உட்பட முக்கிய பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறார்கள் நேரடியாக பேரங்காடிக்கு அழைத்து வரப்பட்டு, அவர்களின் உடல் அளவிற்கு ஏற்ப RSN ராயரும், டாக்டர் லிங்கேஸ்வரனும், இதர பொறுப்பாளர்களும் ஆடைகளை வாங்கி கொடுத்த காட்சி, வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் கவன ஈர்ப்பாக அமைந்தது.

சிறார்கள் அனைவருக்கும் தீபாவளி புத்தாடை வாங்கி கொடுத்து, அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுடன், அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டு, குதூகலத்தில் ஆழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் அறவாரியத்தின் ஆணையர் டத்தோ ஜே. தினகரனும் கலந்து கொண்டார்.

நிகழ்வில் கலந்து கொண்ட பகான் நாடாளுமன்ற உறுப்பினரும் டிஏபி தலைவருமான லிம் குவான் எங் மற்றும் அறவாரியப் பொறுப்பளர்கள் சிறார்களுடன் இணைந்து தங்கள் தீபாவளி நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.


