அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்கான முடக்கம் / நீடிக்கும்

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 21-

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை புதியதாக எடுப்பதற்கு கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் மேற்கொண்ட முடக்க நடவடிக்கை, குறிப்பிட்ட காலம் வரை தொடரும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, இதுவரையில் நாட்டில் உள்ள அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நடப்புத் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமான அளவில் உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் பொருளாதார அமைச்சு நிர்ணயித்துள்ள இலக்கின்படி நாட்டின் மொத்த ஆள்பல எண்ணிக்கையில் 15 விழுக்காடு மட்டுமே அந்நியத் தொழிலாளர்களை சார்ந்து இருக்க வேண்டும் என்பதாகும்.

அந்த எண்ணிக்கை தற்போது நிறைவு செய்யப்பட்டு விட்டதால் இனி புதியதாக அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு அனுமதியில்லை என்று சைபுதீன் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS