மாதுவை மானபங்கம் செய்ததாக குற்றச்சாட்டு

மலாக்கா, அக்டோபர் 22-

பட்ஜெட் ஹோட்டல் ஒன்றில் தமது மகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் உறங்கிக்கொண்டு இருந்த மாது ஒருவரை மானபங்கம் செய்ததாக ஆடவர் ஒருவர், மலாக்கா, ஆயர் குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

42 வயது ரித்வான் ஷா அப்துல்லா என்ற அந்த ஆடவர், கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி அதிகாலை 2.57 மணியளவில் மலாக்கா தென்காஜலான் இமாஸ்-ஸில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அந்த பட்ஜெட் ஹோட்டலில் கழிப்பறை வசதியில்லாத மற்றொரு அறையில் தங்கியிருக்கும் தனது கணவர், தாங்கள் தங்கியிருக்கும் அறையின் கழிப்பறை வசதியை பயன்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக 44 வயதுடைய அந்த மாது, ஹோட்டல் அறையின் வாசற்கதவைத் தாளிடாமல், சாத்தி வைத்திருந்துள்ளார்.

தனது மகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, சந்தடியின்றி அறைக்குள் நுழைந்த அந்த ஆடவர், அந்த மாதுவின் அருகில் நிர்வாணக்கோலத்தில் காணப்பட்டதுடன் அவரை மானபங்கள் செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS