1,700 ரிங்கிட் குறைந்த பட்ச சம்பள விகிதம் / அனைத்து தொழிலாளர்களுக்கும் தொடக்க சம்பள அல்ல

செட்டியு ,அக்டோபர் 21-

2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள 1,500 ரிங்கிட்லிருந்து 1,700 ரிங்கிட் குறைந்தப் பட்ச சம்பள விகித உயர்வு , அனைத்து துறைகளை சேர்ந்த தொழிலார்களுக்கும், ஒரு தொடக்க சம்பளமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று முதலாளிமார்களுக்கு மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் நினைவுறுத்தினார்.

குறிப்பாக, பல்லைக்கழகப் படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு இந்த சம்பளம் பொருந்தாது என்பதையும் அமைச்சர் விளக்கினார்.

இந்த 1,700 ரிங்கிட் குறைந்த சம்பளப் பட்ச விகிதம் என்பது 3 D என்று அழைக்கப்படும் அசுத்தம், ஆபத்து, கடினம் தன்மையிலான தொழில் துறைகளில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்ற போதிய கல்வித் தகுதியை கொண்டிருக்காத அல்லது தொழில் திறன் குறைந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

வேலை செய்கின்ற அனைத்து தொழிலார்களுக்கும் குறைந்தப் பட்சம் சம்பளமாக 1,700 ரிங்கிட்டை நிர்ணியித்து விடலாம் என்று முதலாளிமார்கள் தப்புக்கணக்கை போட்டுவிட வேண்டாம் என்பதையும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

இன்று திரெங்கானு, Setiu-வில் கிழக்கு மண்டலத்திற்கான சொக்சோ புனர்வாழ்வு பயிற்சி மையத்தின் நிர்மாணிப்புப் பணிக்கான பூமி வேலையை தொடக்கி வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS