அந்த கடத்தல் பேர்வழி சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார்

கோலாலம்பூர், அக்டோபர் 22-

போதைப்பொருள் உட்கொண்டது மற்றும் போதைப்பொருள்களைக் கடத்தியது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 37 வயது சிங்கப்பூர் ஆடவர் மலேசியாவில் பிடிபட்டு, சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

அந்த சிங்கப்பூர் ஆடவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2024 வரை பத்தாண்டு காலம் நிகழ்ந்த போதைப்பொருள் குற்றங்களில் அந்த ஆடவருக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அந்த நபர், அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

எனினும் அடுத்தடுத்த நீதிமன்ற விசாரணைகளில் அவர் ஆஜராகத் தவறிவிட்டார். இந்நிலையில் அவரை கைது செய்வதற்கு சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு நீதிமன்ற ஆணையைப் பெற்றது.

WATCH OUR LATEST NEWS