தாம் சார்ந்துள்ள கூட்டுறவுக்கழகத்திற்கு சேர வேண்டிய முதலீட்டுப் பணத்தை தனது மனைவி மற்றும் சகோதரரின் பெயரில் மாற்றிக்கொண்டதாக கூறப்படும் கூட்டுறவுக்கழகம் ஒன்றின் வாரிய உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதுடைய அந்த வாரிய உறுப்பினர், இன்று காலையில் ஈப்போ நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சித்தி ஹனும் முஹமட் ஷா முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிராக ஐந்து நாள் தடுப்புக்காவல் அனுமதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM பெற்றுள்ளது.
தாம் சார்ந்துள்ள கூட்டுறவுக்கழகத்திற்கு சேர வேண்டிய 32 லட்சம் வெள்ளியை மடை மாற்றம் செய்து, தனது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைத்துக்கொண்டதாக அந்த நபருக்கு எதிரான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.