ஜோகூர், அக்டோபர் 23-
ஜோகூர், இஸ்க்கண்டர் புத்ரி- யில் ரில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி 59 வயதுடைய அந்த உள்ளூர் வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு 2 கோடி வெள்ளி பிணைப்பணம் கோரப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த வர்த்தகரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் ஆண்கள் என்றும் மூவர் பெண்கள் என்றும் ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியிலிருந்து இன்று அதிகாலை வரையில் ஜோகூரில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த 13 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
24 க்கும் 58 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்த 13 பேரில் பிடிபட்டுள்ள மூன்று பெண்களில் ஒருவர் அந்நிய நாட்டுப்பெண் என்று டத்தோ குமார் தெரிவித்தார்.
பிடிபட்டுள்ள நபர்களில் நால்வர் குற்றவியல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்கனவே குற்றப்பதிவை கொண்டுள்ளதாக அவர் விளக்கினார்.
இவர்கள் அனைவரும் அக்டோபர் 29 ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவவர் மேலும் கூறினார்.
சீனப்பத்திரிகையின் தகவல்படி, அந்த வர்த்தகர் காலை 5 மணியளவில் வெளிநாட்டிற்கு செல்வதற்காக விமான நிலையத்தை நோக்கி செல்வதற்கு கிரேப் வாகனத்திற்கு காத்திருந்த வேளையில் சில ஆடவர்களை உள்ளடக்கிய கும்பல் ஒன்றினால் கடத்திச்செல்லப்பட்டதாக China Press செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் பிணைப்பணம் செலுத்தப்பட்ட அன்றைய தினமே அந்த வர்த்தக விடுவிக்கப்பட்டதாக அந்த பத்திரிகை தகவல் தெரிவித்துள்ளது.