பகாங், அக்டோபர் 23-
பகாங், ரவூப், செம்பாலிக் என்ற இடத்தில் சிற்றுண்டிக் கடை ஒன்றில் நுழைந்த ஆயுதமேந்திய 6 ஆடவர்கள் நடத்திய அராஜக செயலில் அக்கடையின் பணியாளர் ஒருவர் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு ஆளானார்.
இச்சம்பவம் இன்று அதிகாலை 12.15 மணியளவில் ரவூப், செம்பாலிக்- கில் குஞ்சு என்பவரின் சிற்றுண்டிக்கடையில் நிகழ்ந்தது.
முகமூடி அணிந்திருந்த அசாமிகளின் இந்த அராஜக செயலில் அந்த உணவகத்தின் பணியாளரான 25 வயது நபர் கடுமையான காயங்களுக்கு ஆளாகினார்.
முதுகு, தொடை, கை மற்றும் இடுப்பு ஆகியப்பகுதிகளில் வெட்டுக்காயங்களுக்கு ஆளான அந்த இளைஞர், Lipis மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர்கள், யாரோ ஒருவரை தேடி வந்த நிலையில் இறுதியில் உணவகப் பணியாளரை தாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் அந்த சிற்றுண்டி நிலையத்தில் வேலை செய்து வந்த மற்றொரு ஆடவரான மியன்மார் பிரஜை காயமின்றி உயிர்த்தப்பினார்..
சம்பந்தப்பட்ட நபர்கள், ஒரு Hilux வாகனம் மற்றும் ஒரு ஹோண்டா காரில் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.