கோலாலம்பூர், அக்டோபர் 23-
பாலகோங், பத்து 11, சேரஸ் – ஸில் வாடிக்கையாளர்களின் அபரிமித ஆதரவைப்பெற்று, கடந்த 24 ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வரும் Maghna Cash & Carry வருகின்ற தீபாவளி திருநாளை முன்னிட்டு ஒரு குடும்பமே ஷாப்பிங் செய்யும் அளவிற்கு அனைத்து வகையான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய முன்னணி One Stop Centre வர்த்தகத் தளமாக திகழ்கிறது.

சுற்றுவாட்டார மக்களுக்கு வசதிமிகுந்த ஓரிட வர்த்தகத் தளமாக விளங்கும் Maghna Cash & Carry
தீபாவளிக்காக பிரத்தியோகமாக அனைத்துப்பொருட்களும் தருவிக்கப்பட்டுள்ளதாக விவரிக்கிறார் Maghna Cash and Carry உரிமையாளர் மலாதி.
பாலகோங், பத்து 11 MRT ரயில் நிலையத்தின் தலைவாசலிலேயே வீற்றிருக்கிறது Maghna Cash & Carry.
காஜாங், பத்து 9, பத்து 11, தமன் கன்னாட், பாங்கி, சேரஸ் போன்ற பகுதிகளில் உள்ள மக்கள், MRT ரயிலில் இருபதே நிமிடத்தில் கடை வாசலிலேயே வந்து இறங்க முடியும் என்கிறார் மாலதி.
500 வெள்ளிக்கு மேல் பொருட்களை வாங்குகின்ற வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் காத்திருப்பதாக கூறும், மாலதி, தொடர்ந்து தங்களின் தேர்வுக்குரிய வர்த்தகத் தளமாக Maghna Cash & Carry – க்கு பல ஆண்டு காலமாக ஆதரவு நல்கி வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக்கெண்டார்.

