கோலாலம்பூர், அக்டோபர் 22-
கோலாலம்பூர் மாநகரில் இந்தியர்களின் பாரம்பரிய கிராமப்பகுதியாகப் போற்றப்படும் கம்போங் பாண்டன் -னில் தீபாவளியை முன்னிட்டு 90 பேருக்கு தீபாவளி அன்பளிப்பு கூடைகள் வழங்கப்பட்டன.
கோலாலம்பூர், கம்போங் பாண்டன், லோரோங் லிமா சமூக மண்டபத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 4.00 மணி வரை தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
P .ஸ்ரீதரன் தலைமையிலான Pertubuhan Amal Dan Sosial Komuniti கம்போங் பாண்டன், கோலாலம்பூர் அமைப்பின் ஒத்துழைப்புடன் N. தியாக மூர்த்தி மற்றும் அவர்தம் குழுவினரின் தலைமையில் கம்போங் பாண்டன் Veterans And Youths குழுவினர் இந்நிகழ்வை பிரமாண்டபமான அளவில் ஏற்பாடு செய்தனர்.

வீட்டுக்கு ஒரு பட்டதாரி என்ற கருப்பொருளுடன் கம்போங் பாண்டானில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு உதவும் நோக்கில் இந்த தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கம்போங் பண்டானைச் சேர்ந்தவரும், கூட்டரசுப்பிரதேச மஇகாவின் செயலாளருமான RT சுந்தரம் தெரிவித்தார்.

வசதிகுறைந்த இந்தியர்கள் எங்கு இருந்தாலும் அவர்களும் தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டும். அதற்கு அந்ததந்த வட்டாரத்தைச் சேர்ந்த இந்திய அமைப்புகள் அவர்களுக்கு உதவிட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னதாரண நிகழ்வாக இந்தியர்கள் அதிகமாக வாழ்ந்த ஒரு பகுதியான கம்போங் பாண்டானில் தொடர்ந்து தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக RT சுந்தரம் குறிப்பிட்டார்.

தீபாவளியை முன்னிட்டு வட்டார மக்களுக்கு உதவும் நோக்கில் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினர், ஒரு வீட்டிற்கு ஒரு பட்டதாரி எனும் உன்னத நோக்கத்தையும் முன்வைத்திருப்பது பாராட்டக்கூடியதாகும் என்று இந்நிகழ்வில் சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட R. கேவின் ரமேஷ் தெரிவித்தார்.
கம்போங் பண்டான் மக்களுக்கு கிட்டத்தட்ட 100 ஹெம்பர்களை தீபாவளி அன்பளிப்பாகவழங்குவதில் உண்மையிலேயே மகிழ்ச்சி கொள்கிறோம் என்று நிகழ்விற்கு ஆதரவு கரம் நீட்டியவர்களில் ஒருவரான தொழில்முனைவர் நெல்சன் நாதன் தெரிவித்தார்.
ஒரு சிறப்பான நிகழ்வை நடத்திய ஏற்பாட்டுக்குழுப் பொறுப்பாளர்களுக்கு நிகழ்வின் அறிவிப்பாளர் மைக்கல் தாஸ் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
தீபாவளியையொட்டி கம்போங் பண்டானைச் சேர்ந்த மூத்த மற்றும் இளையோர் குழுவினர், தங்களைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு உதவி வருவது பெரிய உபகாரமாகும் என்று அன்பளிப்புக்கூடைகளை பெற்றுக்கொண்ட மூத்த குடிமக்கள் தெரிவித்தனர்..
RT சுந்தரம், ஸ்ரீ தரன், தியாகமூர்த்தி,கெவின் ரமேஷ், நெல்சன் நாதன், புஷ்பலிங்கம், மைக்கல்தாஸ் உட்பட ஏற்பாட்டுக்குழுவினருக்கு அனைவரும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.