புத்ராஜெயா,அக்டோபர் 24-
இந்தியாவின் மிகப் பெரிய பாடல் போட்டிகளில் ஒன்றான Zee டிவியில் தமிழில் ஒளிபரப்பாகிய
சரிகமப நிகழ்ச்சியில் உலக முழுவதும் 15 ஆயிரம் போட்டியாளர்கள் மத்தியில் படிப்படியாக முன்னேறி, மலேசியாவின் பெயரை உலக அரங்கில் சிறக்க வைத்த அருளினி அஷ்வினா ஆறுமுகம் ஒரு முன்னுதாரணப் பெண் என்று தேசிய ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வர்ணித்தார்.

மலேசிய மண்ணில் இளம் வயதில் பல சவால்களை சமாளித்து, தனது திறனை வெளிப்படுத்த விரும்பும் கனவோடு இருக்கக்கூடியவர்களுக்கு அருளினி ஒரு முன்னுதாணரமாகும் என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று காலையில் புத்ராஜெயாவில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜோகூர், மாசாய் தமிழ்ப்பள்ளியில் படித்தவரான அருனினிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் சரஸ்வதி மேற்கண்டவாறு கூறினார்.

சமூக ஆர்வலரும், KPS டிரவல் ஏஜென்சியின் உரிமையாளரான K.P. சாமியின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்ட இந்த பாராட்டு விழாவில்
மலேசியாவைச் சேர்ந்த 22 வயதுப் பாடகி அருளினி அஷ்வினா ஆறுமுகம். குறுகிய காலத்தில் சிங்கப்பூர், இந்தியா, இலங்கை என்று தமிழர்கள் வாழும் பல நாடுகளில் பிரபலமடைந்து, மலேசியாவின் பெயரையும் மணக்க செய்துள்ளார் என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.
அருளினியின் பாராட்டு விழா ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்று தாம் முடிவு செய்தற்கு முக்கிய காரணம், இத்தகைய திறனுடையவர்களை அமைச்சு அங்கீகரிக்கிறது. இந்த அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்பதை எடுத்துரைக்கவே அமைச்சு அளவில் அருளினிக்கு இந்த பாராட்டு விழா முன்னெடுக்கப்பட்டதாக துணை அமைச்சர் சரஸ்வரி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அருளினிக்கு துணை அமைச்சர் சரஸ்வதி பொன்னாடைப் போர்த்தி சிறப்பு செய்ததுடன், அவரின் திறனின் வெளிபாடுகள் மேலும் மிளிர அரசாங்கம் உரிய கவனம் செலுத்துவதற்கான முன்முயற்சிக்ள எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
சரிகமப நிகழ்ச்சியில் மக்களின் மிகுந்த கவன ஈர்ப்புக்குரிய அருளினி, ‘Autism’ தொடர்புத் திறன்குறைபாடு இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் காட்டி திறமை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
