செர்டாங்,அக்டோபர் 24-
செர்டாங், செரி கெம்பாங்கன், தமன் யுனிவர்சிட்டி-யில் உள்ள ஒரு பழக்கடையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாது ஒருவரின் சங்கிலியை பறித்துச்சென்ற ஆடவர் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP A.A. அன்பழகன் தெரிவித்தார்.
அந்த ஆடவர், மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் பெட்டி ஒன்றைக்கட்டிக்கொண்டு உணவுப்பொருட்களை விநியோகிக்கும் பணியாளரைப் போல் காட்சித் தந்ததாக நம்பப்படுகிறது.
பழக்கடையின் ஐந்தடியில் நடந்து சென்று கொண்டிருந்த 37 வயதுடைய மாதுவின் அருகில் நெருங்கிய அந்த நபர், கழுத்திலிருந்து ர் மின்னல் வேகத்தில் தங்கச் சங்கிலியை பறித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று ACP அன்பழகன் குறிப்பிட்டார்.
இந்த வழிப்பறி கொள்ளையில் சம்பந்தப்பட்ட மாது, காயம் அடையவில்லை என்ற போதிலும் சுமார் மூவாயிரம் வெள்ளி மதிப்புள்ள தங்க சங்கிலி பறிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
