கோலாலம்பூர், அக்டோபர் 24-
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலக்கவியல் நம்பகத்தன்மை மற்றும் தரவு பாதுகாப்பு ஆணையத்தை நிறுவுவதற்கான திட்டத்தை இலக்கவியல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பரிந்துரை செய்துள்ளார்.
உற்பத்திமிக்க தரவு ஓட்டங்களை ஊக்குவிக்கும் பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமிக்க நம்பகமான தரவு சூழல் அமைப்பின் மேம்பாட்டை இந்த ஆணையம் அணுக்கமாக கண்காணித்து வரும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

இலக்கவியல் தொழில் துறையைச் சார்ந்தவர்களுடன் தாம் கலந்து ஆலோசனை நடத்தியது மூலம் இந்த திட்டம் தொடர்பாக ஒரு அமைப்புக்குழுவை அமைக்க பரிந்துரை செய்துள்ளோம். இந்த ஆணையத்தை அமைப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு குறித்து விவாதிக்க வரும் திங்கட்கிழமை ஒரு சந்திப்பை இந்த அமைப்புக்குழு நடத்தும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதும், எதிர்காலத்திலும் உற்பத்திமிக்க மற்றும் பொறுப்புமிகுந்த தொழில்நுட்ப பயன்பாடுகளை வலுப்படுத்துவதற்கு இந்த ஆணையம் அடித்தளமிடும் என்று கோபிந்த் சிங் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் இன்று 2024 ஆம் ஆண்டுக்கான MDX எனப்படும் Malaysia Digital Xceleration உச்சநிலை மாநாட்டை தொடக்கிவைத்து உரையாற்றுகையில் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.