கோலா திரங்கானு , அக்டோபர் 24-
வட கிழக்கு பருவமழை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திரெங்கானு மாநிலத்தில் நேற்று பல்வேறு இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்து இருப்பது, அடுத்து வரக்கூடிய மிகப்பெரிய வெள்ளப் பேரிடருக்கான அறிகுறியாகும் என்று கூறப்படும் வாதத்தை பருவநிலை மற்றும் வானிலை ஆய்வாளர் Dr Chung Jing Xiang மறுத்துள்ளார்.
அடுத்த மாதம் வட கிழக்கு பருவமழை தொடங்கவிருக்கிறது. அதற்கு முன்னதாக கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி தென்மேற்கு பருவமழையின் சிறப்பியல்புகளில் ஒன்று அலங்கட்டி மழையாகும்.
இந்த பருவநிலை மாற்றத்தின் சிறப்பியல்வானது, பொதுவாக காலையில் வானம் தெளிவாக இருக்கும். பல்வேறு திசைகளில் இருந்து காற்று மிக பலவீனமாக காணப்படும். இந்த குறுகிய காலத்தில் இடியுடன் கூடிய கனமழையானது, பலத்த காற்றை ஊக்குவிக்கும். இதனால் ஏற்படக்கூடிய சூறாவளியின் வெளிப்பாடே ஆலங்கட்டி மழையாகும்.
இந்த ஆலங்கட்டி மழைக்கும் வெள்ளப்பேரிடருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. எனவே மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்று Dr Chung Jing Xiang விளக்கினார்.