ஷா ஆலம், அக்டோபர் 24-
சிலாங்கூர், அம்பாங், தமன் மேலாவதி – யில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவினால் பல குடும்பங்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், அந்தப்பகுதி பாதுகாப்பானதாகும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.
எனினும் அப்பகுதியில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நிலச்சரிவுக்கு வித்திட்ட மலைச்சாரலில் தடுப்பு சுவர்கள் எழுப்பப்படும் என்று அவர் குறிபிட்டார்.
அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகம் இந்த தடுப்புச்சுவரை எழுப்பும் அதேவேளையில் அந்த மலைச்சாரல் இடருக்கு உரிய பகுதியாக இல்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அமிருடின் ஷாரிதெரிவித்தார்.