கோலாலம்பூர், அக்டோபர் 24-
நாட்டின் பிரதான முதலீட்டு நிறுவனமான 1MDB-யில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக தார்மீகப்பெறுப்பேற்று அனைத்து மலேசியர்களிடமும் பகிரங்க மன்னிப்புக்கேட்டுக்கொள்ளவதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த முறைகேடுகளை தாம் புரியவில்லை என்றும் / தாம் குற்றம் இழைக்கவில்லை என்றும் / தமது நிலைப்பாட்டை நஜீப் தொடர்ந்து தற்காத்துக்கொண்டார்.
ஆனால், இந்த முறைகேடுகள் யாவும் தற்போது போலீசாரால் தேடப்பட்டு வரும் மலேசிய வர்த்தகர் Jho Low மற்றும் PetroSaudi நிர்வாகியால் புரியப்பட்டவையாகும் என்று நஜீப் விளக்கினார்.
தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நஜீப்பின் இந்த தன்னிலை விளக்கத்தை அவரின் மகன் டத்தோ முகமட் நிசார் நஜிப், இன்று மாலையில் கோலாலம்பூரில் ஓர் அறிக்கையின் வாயிலாக வாசித்தார்.
1MDB நிதி நிறுவனத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய முறைகேடு மற்றும் லஞ்ச ஊழல் தொடர்பில் பிரதான சந்தேகப் பேர்வழியாக குற்றஞ்சாட்டப்பபட்டுள்ள நஜிப்பை, எதிர்வாதம் செய்வதற்கு அழைப்பதா? அல்லது அவரை விடுதலை செய்வதா? என்பது குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முடிவெடுக்கவிருப்பதாக அறிவித்த 6 நாட்களுக்கு பிறகு நஜீப்பின் இந்த பகிரங்க மன்னிப்பை அவரின் மகன் இன்று வாசித்தார்.
நாட்டின் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் என்ற முறையில் தம்முடைய நேரடிப் பார்வையிலும், கட்டுப்பட்டிலும் இருந்த அரசாங்கத்தின் முதன்மை முதலீட்டுத் திட்டமான 1 MDB-யில் நிகழ்ந்த மிகப்பெரிய முறைகேடுகள், உண்மையிலேயே தனது இதயத்தை ரணப்படுத்தி விட்டதாக நஜீப் தமது பகிரங்க மன்னிப்பில் மிக உருக்கமாகத் தெரிவித்துக்கொண்டார்.