West Port துறைமுகம் அருகில் விபத்து, இருவர் படுகாயம்

கோலாலம்பூர், அக்டோபர் 25-

கிள்ளான், West Port துறைமுகம் அருகில் ஜாலான் புலாவ் இந்தா -வில் கார் மற்றும் லோரி சம்பந்தப்பட்ட விபத்தொன்றில் ஒரு ஆணும், பெண்ணும் காயமுற்றனர்.

இன்று அதிகாலை 3.21 மணியளவில் கோலக்கிள்ளான் சுயேட்சை மண்டலப்பகுதிக்கு அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 40 வயது ஆடவரும், 36 வயது பெண்ணும் காயமுற்றதாக West Port துறைமுக தீயணைப்பு நிலைய செயலாக்க அதிகாரி முகமது ரஸீ ஜாஃபர் தெரிவித்தார்.

லோரியால் மோதப்பட்ட காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி, வெளியேற முடியாமல் பெரும் அவதிக்குள்ளான அவ்விருவரையும் மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS