Rohingya ஆடவர் மீது குற்றச்சாட்டு

கோலா பிலா, அக்டோபர் 25-

தனது காதலியான ஓர் இந்தோனேசியப் பெண் கடுங் காயங்களுக்கு ஆளாகும் அளவிற்கு அவரை கத்தியால் குத்தியதாக Rohingya ஆடவர் ஒருவர், , கோலா பிலா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

43 வயது ஃபோஸி ஆலம் முகமது ஆலம் என்ற அந்த நபர் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் ஜெம்போல், பஹாவ், தமன் அக்பே- வில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம், பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் அந்த ரொஹிங்யா ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS