கிள்ளான்,அக்டோபர் 25-
இம்மாதம் முற்பகுதியில் கிள்ளான், பாண்டமாறன், ஜாலான் ஜகோங்-கில் ஓர் இந்தியருக்கு சொந்தமான பங்களா வீட்டில் அதன் உரிமையாளரை காயப்படுத்தி, பிறரை பாராங் முனையில் அச்சுறுத்தி, தங்க நகைகள், சாமி சிலைகள், ரொக்கப்பணம் என பல ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையடித்ததாக 5 இந்திய இளைஞர்கள், கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.


வேலை இல்லாதவரான 23 வயது லிங்கேஸ்வரன் முனியாண்டி, / லோரி உதவியாளரான 38 வயது தமிழ் குமரன் பன்னீர் செல்வம், / ஒரு பாதுகாவலரான 33 வயது சிவ கணேசன், / லோரி உதவியாளரான 33 வயது தமிழரசன் ராஜேந்திரன் /மற்றும் e hailing ஓட்டுநரான 28 வயது நாகேன் சவரணன் ஆகிய ஐவர் நீதிபதி ஷரிபா ஹசிண்டி சையத் உமர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த ஐவரும் கடந்த அக்டேபார் 3 ஆம் தேதி காலை 6.16 மணியளவில் பண்டமாரானில் உள்ள சேகரன் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான பங்காள வீட்டிற்குள் நுழைந்து, முகமூடி அணிந்த நிலையில் பாராங்குகளை ஏந்திய வண்ணம் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி சாமி சிலைகள் உட்பட சுமார் 74 ஆயிரத்து 500 வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை கொள்ளையடித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றம் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 மற்றும் 397 பிரிவின் கீழ் ஐவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த ஐவரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியதால் ல் அவர்களை தலா பத்தாயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு ஷரிபா ஹசிண்டி சையத் உமர் அனுமதி அளித்தார்.
இந்த ஐவரும் ஒவ்வொரு மாதமும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.