மித்ரா 4.0 கல்வி நிதி உதவித்திட்ட காலக்கெடு நீட்டிப்பு

அக்டோபர் 25

அரசு மற்றும் தனியார் உயர்கல்வி கூடங்களில்
முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த B40 மாணவர்கள் 2014 ஆம் ஆண்டின் மித்ரா 4.0 நிதியுதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, இன்று அக்டேபார் 25 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.-

இந்த நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு இதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்த காலக்கெடு, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரையாகும்.

இந்த நிதி உதவிக்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படி உ யர்கல்விக்கூடங்களில் பயிலும் இந்திய மாணவர்களிடமிருந்து அதிகமான கோரிக்கை வந்த வண்ணம் இருப்பதால், இந்த காலக்கெடுவை இன்று அக்டோபர் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் அடுத்த மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.59 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மித்ரா இன்று வெ ளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிதி உதவிக்கு டிப்ளோமா மற்றும் இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு:

https://shorturl.at/22heF என்ற இணைப்பில் உள்ள
வழக்காட்டி தொகுப்பை நாடலாம். அதுமட்டுமின்றி 03-8886 6192 / 6082 என்ற எண்கள் மூலம் மித்ரா அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது [email protected], [email protected] ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

WATCH OUR LATEST NEWS