ஜார்ஜ் டவுன், அக்டோபர் 25-
வட்டி முதலைகளால் தாம் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக Tik- Tok- கில் பொய்யான தகவலை வெளியிட்ட குற்றத்திற்காக பெண் பாதுகாவலர் ஒருவருக்கு ஜார்ஜ்டவுன், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.
வான் ஐன்ஸ்யதுல் மைம் வான் யுஸ்ஸைதி என்ற 26 வயதுடைய அந்தப் பெண், கடந்த ஜுலை மாதம் வெளியிட்ட டிக் டாக் காணொளியில் தனது தந்தை வாங்கிய கடனுக்காக வட்டி முதலைகள் தம்மை வலுக்கட்டாயமாக விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறியிருந்தார்.
அந்தப் பெண்ணின் காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அந்தப் பெண்ணை விபச்சாரத் தொழிலிருந்து மீட்பதற்கு போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கினர். குறிப்பாக, அந்தப் பெண்ணை அடையாளம் காண்பதில் போலீசார் முனைப்புக்காட்டினர்.
எனினும் அந்தப் பெண்ணை கண்டுப்பிடித்து அது குறித்து விசாரணை செய்ததில் அவர் பொய்யான தகவலை வெளியிட்டது கண்டு பிடிக்கப்பட்டது.