கூலிம்,அக்டோபர் 25-
கெடா, கூலிம் நகராண்மைக் கழகத்தில் அதன் பிரதான அலுவலகத்தின் முன்பு புறம், முதல் முறையாக கோலமிடப்பட்டு, தீபாவளி திருநாள் வரவேற்கப்பட்டுள்ளது.
பல்வேறு இனங்களுக்கு இடையில் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் நோக்கில் ஒற்றுமையின் பிரதிபலிப்பாக கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் ரங்கோலி கோலத்துடன் தீபாவளி அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது..

ரங்கோலி கோலம் மூவின மக்களிடைய ஒற்றுமை உணர்வை வலுப்படுத்துவத்தோடு , நல்லிணக்கமும், ஒருமைப்பாடும் மேலோங்குவதற்கு அடித்தளமிடுகிறது என்று கோல அலங்கரிப்பை பார்வையிட்ட கூலிம் நகராண்மை கழகத்தின் தலைமை அதிகாரி டத்தோ ஹாஜி ஹெல்மி யூசோப் தெரிவித்தார்.
கூலிம் நகராண்மை கழகத்தில் பணியாற்றி வரும் இந்திய ஊழியர்களும், கூலிம் மாவட்ட இந்தியர்களும், தங்களின் உன்னத பண்டிகையான தீபாவளியை வரவேற்கும் அதேவேளையில் மக்கள் மத்தியில் தீபாவளி திருநாளின் சூழலை உருவாக்கும் வகையில் நகராண்மைக்கழகம் இந்த பங்களிப்பை வழங்கியிருப்பதாக டத்தோ ஹெல்மி குறிப்பிட்டார்.
மேலும் , கூலிம் நகராண்மை கழகம் எப்பொழுதும் மூவின இன மக்களின் உணர்வை மதிப்பத்தோடு அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துவத்தற்கான செயல்களில் ஈடுபடும் என்று உறுதி கூறினார்.
கூலிம் நகராண்மைக் கழக நுழைவுவாசலில், அலுவலகத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து ஒற்றுமையாக மயில் வடிவத்தில் ரங்கோலி கோலம் வரையப்பட்டு இருப்பது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது என்று டத்தோ ஹெல்மிபெருமிதம் தெரிவித்தார்.
