ஈப்போ , அக்டோபர் 25-
சீனர்களின் உலக Guan Gong விழா கொண்டாட்டத்தையொட்டி தெலுக் இந்தான், சாய்வு கோபுரத்தில் நடைபெற்ற விழாவில் சீன நாட்டுக்கொடியை பறக்கவிட்டதற்காக அதன் ஏற்பாட்டுக்குழு சங்கம் இன்று பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டது.
தெலுக் இந்தான் சாய்வுக் கோபுரத்தில் சீன நாட்டுக்கொடிகள் பறக்கும் காட்சியைக் கொண்ட காணொளி, சமூக வலைத்தளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து பாஸ் கட்சி உட்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
எனினும் சீனக்கொடி பறக்கவிடப்பட்டது திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல. எதிர்பாராமல் நடந்த சம்பவமாகும் என்று சீன கலாச்சார சங்கமான Guan Gong- கின் தலைவர் Soon Boon Hua இன்று விளக்கம் அளித்துள்ளார்.
